Saturday, June 4, 2011

ஜூன் திங்களில் தொடர்ந்து 4 படங்கள்

சென்னை சாந்தி திரையரங்கில் 17.06.2011 முதல் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம், மன்னவன் வந்தானடி












































சென்னை சாந்தியில் 03.06.2011 முதல் தினசரி 4 காட்சிகளாக நடிகர் திலகத்தின் 167வது திரைப்படமான ராஜபார்ட் ரங்கதுரை வெளியிடப்பட்டது. ஞாயிறு 05.06.2011 அன்று மாலைக் காட்சி ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் கொண்டாடப்பட்டது. அன்றைய காட்சிகளின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு.




பாரதமே என்னருமை தாயகமே என்று இறுதி வரை வாழ்ந்து காட்டிய தேசிய திலகம், விடுதலை வீரர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் போது நாமும் தேசீய உணர்வுடன் அல்லவா பொங்கி எழுகிறோம்.




அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் நம்மை வளர்த்தார். தாயென்றும் தந்தையென்றும் அவர் நம்மை வளர்த்தார். அவர் நமக்காக வாழ்கின்ற உள்ளம் அல்லவோ என்று ரசிகர்கள் உள்ளம் உருகி உணர்ச்சிப் பெருக்குடன் ஆர்ப்பரிக்கும் காட்சி




மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் - உதய காலம் வரை உத்தமர் சேவைகளாம் என்று ரசிகர்கள் அரங்கினுள் ஆர்ப்பரிக்கும் காட்சிகள்




















அலங்காரம் கலையாத மலர் மாலை இங்கே - அணிவிக்க அழைக்கின்றோம் அண்ணனை - எங்கே என்று கூறாமல் கூறும் மாலைகள் தயாராக...




மக்கள் வெள்ளம்




சென்னை மாநகரில் 03.06.2011 அன்று ஒரே நாளில் நடிகர் திலகத்தின் 3 திரைப்படங்கள் திரையிடப் பட்டுள்ளன. முன்னர் மினர்வா என்றழைக்கப்பட்டு, தற்போது பாட்சா என்ற பெயரில் இயங்கும் திரையரங்கில் முற்பகல் 11.30 மணி காட்சியில் பச்சை விளக்கு திரைக்காவியமும், மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாசா திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக புதிய பறவை திரைக்காவியமும், சாந்தி திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியமும், வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளன. அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நமது நன்றிகளும் வாழ்த்துக்களும். அதே போன்று மூன்று திரைக்காவியங்களையும் வெற்றி பெற வைத்து விநியோகஸ்தர்களுக்கு மென்மேலும் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையிட ஆர்வம் உண்டாக்கும் வகையில் திரளெனத் திரண்டு வந்து ஆதரிக்குமாறு ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் நமது வேண்டுகோளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.